சமையல் மற்றும் பிரியாணி செய்முறை பயிற்றி குழு

  • Home
  • India
  • Tiruchendur
  • சமையல் மற்றும் பிரியாணி செய்முறை பயிற்றி குழு

சமையல் மற்றும் பிரியாணி செய்முறை பயிற்றி குழு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சமையல் மற்றும் பிரியாணி செய்முறை பயிற்றி குழு, Kitchen/Cooking, 54/80 kothuva palli north street, kulasekaranpattinam, Tiruchendur.

17/05/2026
17/05/2026

Today my prepperation camel, 🐪🐪🐪biriyani from madinah saudi arabiya

06/04/2025

45kg beef biriyani

12/12/2024

3kg beef biriyani செய்முறை அடுத்தடுத்து

21/10/2024

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக! புதியதாக பிரியாணி தொழில் செய்பவர்களுக்காக ஒரு கிலோவிற்கான தம் பிரியாணிக்கு தேவையான பொருள் மற்றும் செய்முறை:-
பாஸ்மதி or சீரக சம்பா அரிசி -1கிலோ
ஆயில் -200ml
பட்டை -1கிராம்
ஏலக்காய் -1கிராம்
கிராம்பு -1கிராம்
மிளகாய் தூள் -10கிராம்
கல் உப்பு -40கிராம்
தயிர் -200ml
வெங்காயம் -400கிராம்
தக்காளி -400கிராம்
இஞ்சி -100கிராம்
பூண்டு -50கிராம்
மிளகாய் -10கிராம்
மல்லி இலை -100கிராம்
புதினா இலை -100கிராம்
லெமன் -1(ஜூஸ் )
தண்ணீர் -
சிக்கன் பிரியாணிக்கு 1லிட்டர் 250ml
மட்டன் &பீப் பிரியாணிக்கு -1லிட்டர் 500ml
செய்முறை :-
அடுப்பு பத்த வைக்கும் முன் பாஸ்மதி அரிசியை ஊற வைக்க வேண்டும்
சீரக சம்பா அரிசி என்றால் பிரியாணிக்கு தக்காளி சேர்க்கும் போது அரிசியை ஊற வைக்க வேண்டும் ( சீரக சம்பா நிறைய நேரம் ஊற வைக்க கூடாது )
அடுப்பு பத்த வைத்து முதலில் சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் பட்டையும் இலவங்கம் கிராம்பு மூன்றையும் ஒன்று சேர்த்து போட வேண்டும், வெங்காயம் நன்கு கோல்டன் பிரவுன் நிறமாக வரும் வரை வதக்கவும், அதன் பிறகு மல்லி இலை புதினா இலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும், அடுத்து மிளகாய் தூள் சேர்க்கவும், சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும், அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும், பிறகு தக்காளி, தயிர் உப்பு மூன்றையும் ஒன்று சேர்த்து வதக்கவும், தக்காளி நன்றாக வேகும் வரை வதக்கவும், சிக்கன் பிரியாணியாக இருந்தால் தக்காளி வதங்கியதும் தண்ணீர் ஊற்ற வேண்டும், தண்ணீர் நல்ல கொதி வந்ததும், சிக்கனை அதில் போட வேண்டும், சிக்கன் போட்டு ஐந்து நிமிடம் கழித்து கொதி வந்ததும், ஊற வைத்து அரிசியை வடிகட்டி பதில் போட வேண்டும், தண்ணீரில் லெவலும் அரிசியின் லெவளும் சீராக வரும் போது தீயை குறைத்து விட வேண்டும், பிறகு சட்டியை மூடி சட்டியின் கீழ் உள்ள தீ கங்கை எடுத்து மூடியின் மேல் போட வேண்டும்,
மட்டன் அல்லது பீஃப் பிரியாணி ஆக இருந்தால் தக்காளி வதங்கியதும் கறியை அதில் முதலில் போட வேண்டும் இரண்டு நிமிடம் நன்றாக பிரட்டி விடவும், பிறகு தண்ணீர் ஊற்றவும், தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்தவுடன் தீயை குறைத்து low flamil, வைத்து விடவும், லோ ஃபிளேமில் தான் கறி சீக்கிரமாக வேகும், அதிக தீ வைக்க கூடாது, கறி வெந்த உடன் ஹை flam இல் கொதிக்க விட வேண்டும், கொதி வந்ததும் அரிசியை வடிகட்டி அதில் போட வேண்டும், அரிசியின் லெவலும் தண்ணீரின் லெவலும் சீராக இருக்கும் பட்சத்தில் தம் போட வேண்டும்
கேஸ் அடுப்பாக இருந்தால் லோ பிளேமில் 25 நிமிடம் தம் போட வேண்டும்,
விறகு அடுப்பில் செய்தால் விறகை எடுத்துவிட்டு கங்கை மட்டும் மூடியின் மேல் போட்டு தம் போட வேண்டும், அப்படி செய்தால், கீழே அடிபிடிக்காமல் மேலே இருந்து கீழ் வரை சாப்பாடு உதிரியாக இருக்கும்,
நெருப்பை கீழே அணை கட்டினால் பத்து நிமிடம் கழித்து கீழே உள்ள நெருப்பை மட்டும் அணைத்து விடவும், மூடியின் மேல் உள்ள நெருப்பு 30 நிமிடம் இருக்க வேண்டும்

இது ஒரு கிலோவுக்கான அளவு, நீங்கள் எத்தனை கிலோ செய்தாலும் இதை மல்டிபிளை பண்ணவும்
இது குழுவில் உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்
உங்களுக்கு பகிர்ந்ததில் மகிழ்ச்சியும் அடைகிறேன்,.
வாழ்த்துக்கள் 🌹🌹

Address

54/80 Kothuva Palli North Street, Kulasekaranpattinam
Tiruchendur
628206

Website

Alerts

Be the first to know and let us send you an email when சமையல் மற்றும் பிரியாணி செய்முறை பயிற்றி குழு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share