08/05/2026
மிருத்யுஞ்ஜய ஹோமம் அல்லது மஹா மிருத்யுஞ்ஜய மந்திர வழிபாடு மரண பயத்தை நீக்கி, நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்கக்கூடிய உன்னதமான வழிபாடாகும்.
சனியின் கோச்சார மாற்றங்களான ஏழரை சனி,விரயசனி, ஜென்ம சனி,பாதசனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி , கண்டக சனி போன்ற காலங்களில் ஏற்படும் உடல் உபாதைகள், மன உளைச்சல் மற்றும் விபத்துகளில் இருந்து தப்பிக்க இந்த வழிபாடு ஒரு கவசமாகத் திகழ்கிறது.
சனி பகவான் கர்ம வினைக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர். ஜாதகத்தில் தசாபுத்தி மற்றும் அந்தர காலங்கள் சாதகமற்ற நிலையில் இருக்கும்போது, ரத்தம் தொடர்பான நோய்கள்,கிட்னி பாதிப்பு,நீரழிவு, எலும்புருக்கி நோய், எலும்பு முறிவு, தீராத வயிற்று வலி, நரம்புத் தளர்ச்சி கைகால் உளைச்சல் ,முறுக்கி பிழிதல், இனம் புரியாத மனச்சோர்வு,அதீத சோம்பேரித்தனம் போன்றவை ஏற்படக்கூடும். இவற்றை எதிர்கொள்ள வீட்டில் தினசரி செய்ய வேண்டிய வழிமுறைகளை இங்கே காணலாம்.
வீட்டில் முழு மிருத்யுஞ்ஜய ஹோமத்தையும் தினமும் செய்வது கடினம் என்பதால், "மிருத்யுஞ்ஜய ஜப வழிபாடாக" இதனை மிக எளிமையாகச் செய்யலாம்.
அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் சோம்பல் விலக்கி எழுந்து , சூரிய உதயத்தின் போது நீராடி, தூய ஆடை அணிந்து கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர வேண்டும்.
முதலில் விநாயகரை மனதார வேண்டி, பிறகு சிவபெருமானின் திருவுருவப் படத்திற்கு முன்னால் ஒரு நெய் தீபம் ஏற்ற வேண்டும்.
மிருத்யுஞ்ஜய மந்திரத்தின் மையக்கருத்து, நன்கு பழுத்த வெள்ளரிக்காய் அதன் காம்பிலிருந்து எப்படி மிக எளிதாக, வலியின்றி விடுபடுகிறதோ, அதுபோல நானும் நோய்களில் இருந்தும், பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்தும் விடுதலையாக வேண்டும் என்பதாகும்.
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை அல்லது உங்களால் முடிந்த அளவு (குறைந்தது 27 முறை) உச்சரிக்க வேண்டும்:
"ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |
உர்வாருகமிவ பந்தனான் மிருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ||"
இந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது ஒரு செம்பு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை வைத்து, அதன் மீது வலது கையை மூடி வைத்து ஜபிக்க வேண்டும்.
மந்திரத்தின் அதிர்வுகள் அந்த நீரில் இறங்கும். ஜபம் முடிந்த பிறகு அந்த நீரை "தீர்த்தமாக" அருந்துவதுடன், வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
இது உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் என்பது ஐதீகம்.
சனி பிடியின் வீரியத்தைக் குறைக்க, இந்த மந்திர வழிபாட்டோடு சில தான தர்மங்களையும் இணைத்துக் கொள்வது அவசியம்.
சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றோர்க்கு அல்லது முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது, காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பது மற்றும் கருப்பு எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது கூடுதல் பலனைத் தரும்.
ஜாதக ரீதியான தசாபுத்தி காலங்களில் ஏற்படும் கடுமையான கண்டங்களில் இருந்து தப்பிக்க, மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது பிறந்த நட்சத்திரத்தன்று வீட்டில் சிறிய அளவில் மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்வது மிருத்யுஞ்ஜய ஜபம் செய்வது பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.
பயம், பதற்றம் மரண பீதி உள்ளவர்களுக்கு இந்த வழிபாடு ஒரு சிறந்த மனோதத்துவ மருந்தாகவும் அமைகிறது.
நம்பிக்கையுடனும், தூய்மையான மனதுடனும் இந்த வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வந்தால், சனியின் எந்தக் கடுமையான காலமும் உங்களை பெரிய அளவில் பாதிக்காமல் கடந்து செல்லும்.
Mrityunjaya Homam or Maha Mrityunjaya Mantra worship is a noble worship that removes the fear of death and provides long life and health.
This worship serves as a shield to escape from physical ailments, mental stress and accidents that occur during the transits of Saturn such as Ezharai Saturn, Virayasani, Janma Saturn, Padasani, Ashtama Saturn, Arthashtama Saturn, Kandaka Saturn.
Lord Saturn gives results according to karmic actions. When the Dasabuddhi and Antara periods in the horoscope are unfavorable, blood-related diseases, kidney damage, dehydration, osteoporosis, bone fractures, chronic stomach pain, nervous weakness, limb tremors, twisting and squeezing, unexplained depression, extreme laziness, etc. may occur. Here are some daily home remedies to combat these.
Since it is difficult to perform the entire Mrityunjaya Homam at home every day, you can do it very simply as a "Mrityunjaya Japa Poojapat".
Get up early in the morning at Brahma Muhurtham, take a bath at sunrise, wear clean clothes and sit facing east or north.
First, pray to Lord Ganesha with all your heart, and then light a ghee lamp in front of the image of Lord Shiva.
The main idea of the Mrityunjaya Mantra is that just as a well-ripened cucumber is easily and painlessly freed from its stalk, similarly I should be free from diseases and the cycle of birth and death.
This mantra should be chanted 108 times daily or as many times as you can (at least 27 times):
"Om Tryambagam Yajamahe Sukantim Pushtivardanam |
Urvarugamiva Bandhanan Mrityor Mukshiya Mamrutad ||"
While chanting this mantra, keep clean water in a copper vessel, cover it with your right hand and chant.
The vibrations of the mantra will descend into that water. After the chanting is over, drink that water "purely" and also give it to the people in the house.
It is believed that this destroys pathogens in the body and stimulates the immune system.
To reduce the strength of Saturn, it is necessary to combine some alms with this mantra worship.
On Saturdays, offering food to the disabled or the elderly, offering rice mixed with sesame seeds to crows, and lighting a lamp with black sesame oil will provide additional benefits.
To escape from the severe kandis that occur during the horoscope's ten-day periods, performing a small Mrityunjaya Homam at home once every three months or on the day of your birth star and chanting Mrityunjaya Japa will ensure protection.
This worship is also an excellent psycho-philosophical medicine for those who suffer from fear, anxiety, and fear of death.
If you continue to do this worship with faith and a pure mind, any severe period of Saturn will pass without affecting you to any great extent.
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Engr. KARTHIKEYAN .V
(Alias GEETHAPPRIYAN)
AMIE•ARCH•ENGG, PMP, MBA.
DfD| Let's Design Online | Dial for Design | [email protected]
9 9 4 0 2 5 5 8 7 3
Traditional Indian architecture of Sthapatya Veda well known as Vaastu shastra is losing its authenticity due to the rising number of false practitioners. People should understand the scientific value behind the spatial organisation of buildings designed as per Vaastu. It is pity that this shastra is sometimes looked down as a superstitous or religious belief. Through our works we aim to promote healthy living spaces for the well being of humanity in both physical and spiritual sense.
Vastu Shastra is not merely a matter of belief; it is a meticulous science centered on directions and energy flows. If you wish to experience the full benefits of Vastu—achieving 100% positive results—in your home, office, or factory, it is essential to rely on precise technical methods rather than approximate sketches.
The first step involves identifying the building's exact geographical center (Brahmasthan) and its directional angles (degrees) using Google Maps. This data is then used to create a professional 'Grid' map in AutoCAD, ensuring every measurement is accurate. In the modern era, there can be slight variations between a magnetic compass and the true geographical direction; therefore, a map cross-referenced with Google Map data is the only way to accurately identify the 16 Vastu zones.
Without a properly gridded layout, identifying Vastu flaws becomes guesswork. Inaccurate calculations can lead to ineffective remedies, and in some cases, improper adjustments may even result in negative consequences.
To renovate or align a building according to Vastu, the map must be prepared with exact measurements. Energy is enhanced only when the specific zones tied to your concerns are correctly identified and addressed. Without a systematic map, it is difficult to channel the full potential of Vastu benefits into your space. Dial for Design is available to help you verify your layout and provide expert consultations based on these precise directional insights.
பாரம்பரிய இந்தியக் கட்டடக்கலை முறையான ஸ்தாபத்ய வேதத்தின் ஒரு அங்கமான வாஸ்து சாஸ்திரம், இன்று பல போலிப் பயிற்சியாளர்களால் அதன் உண்மைத் தன்மையை இழந்து வருகிறது. இது வெறும் மதச் சடங்காகவோ அல்லது மூடநம்பிக்கையாகவோ பார்க்கப்படுவது வருத்தத்திற்குரியது. உண்மையில், வாஸ்து என்பது திசைகள் மற்றும் ஆற்றல் ஓட்டங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு துல்லியமான அறிவியல் ஆகும். ஒரு கட்டிடத்தின் இட அமைப்பானது அங்கு வசிப்பவர்களின் உடல் மற்றும் ஆன்மீக நலனை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்குவதே இதன் முக்கிய நோக்கம். மனிதகுலத்தின் மேன்மைக்காக ஆரோக்கியமான மற்றும் நேர்மறை ஆற்றல் மிக்க வாழ்விடங்களை உருவாக்குவதே இந்த சாஸ்திரத்தின் அடிப்படை இலக்காகும்.
வாஸ்து சாஸ்திரத்தில் முழுமையான மற்றும் நூறு சதவீத நேர்மறையான பலன்களைப் பெற வேண்டுமென்றால், மேலோட்டமான வரைபடங்களை நம்புவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு கட்டிடத்தின் துல்லியமான புவியியல் மையப்புள்ளியான 'பிரம்மஸ்தானம்' மற்றும் அதன் சரியான திசைக் கோணங்களைக் கண்டறிவதே மிக முக்கியமான முதல் படியாகும். நவீன காலத்தில், காந்த திசைகாட்டி காட்டும் திசைக்கும் புவியின் உண்மையான திசைக்கும் இடையே சிறிய வேறுபாடுகள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, கூகுள் மேப்ஸ் தரவுகளைக் கொண்டு, ஒரு கட்டிடத்தின் நிலையைத் துல்லியமாக ஆய்வு செய்து, அதை ஆட்டோகேட் (AutoCAD) மென்பொருள் மூலம் முறையான 'கிரிட்' வரைபடமாக மாற்றுவது அவசியமாகும்.
இத்தகைய துல்லியமான வரைபடம் இருந்தால் மட்டுமே ஒரு கட்டிடத்தில் உள்ள 16 வாஸ்து மண்டலங்களைச் சரியாக அடையாளம் காண முடியும். முறையான கணக்கீடுகள் இன்றி வாஸ்து குறைபாடுகளைக் கண்டறிய முயல்வது வெறும் யூகமாகவே முடியும். அவ்வாறு தவறான கணிப்புகளின் அடிப்படையில் செய்யப்படும் மாற்றங்கள் அல்லது தீர்வுகள், எதிர்பார்த்த பலனைத் தராது என்பதோடு சில நேரங்களில் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். ஒரு கட்டிடத்தின் ஆற்றலை மேம்படுத்த வேண்டுமானால், சம்பந்தப்பட்ட வாஸ்து மண்டலங்களைத் துல்லியமாகக் கண்டறிந்து சீரமைப்பது மட்டுமே சரியான வழியாகும்.
உங்களின் வீடு, அலுவலகம் அல்லது தொழிற்சாலை எதுவாக இருந்தாலும், முறையான வரைபடம் மற்றும் அறிவியல் ரீதியான அணுகுமுறை மூலம் மட்டுமே வாஸ்துவின் முழுப் பயன்களையும் அடைய முடியும். இந்தத் துல்லியமான கணக்கீட்டு முறைகளைப் பின்பற்றி உங்கள் கட்டிடத்தின் அமைப்பைச் சரிபார்க்கவும், நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெறவும் 'டயல் ஃபார் டிசைன்' (Dial for Design) உங்களுக்குத் துணையாக இருக்கும்.